ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் எரிக்கப்பட்டுள்ளது.
4 months ago





ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கடந்த ஆனி மாதம் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் - பாஸ்கரன்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
