1500 கிலோ எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்தார் திருச்செல்வம்.
7 months ago

யாழ்.தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோ எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
நேற்றுக் காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், கொடிகாமத்திலுள்ள நட்சத்திர மஹால் முன்றிலில் ஏ - 9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு நடைபெற்றது.
வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
இதேவேளை, செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் முன்னர் பல தடைவைகள் பல்வேறு வாகனங்களை இழுத்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
