யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கோடிக் கணக்கான பணம் மோசடி, பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை

1 month ago




யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே அந்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியான முறையில் பணம் பெற்றமை, பண மோசடியில் ஈடுபட்டமை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் முறையான பதிவுகள் இன்றி வெளிநாட்டுக்கு அனுப்பும் முகவராக தன்னை அடையாளப்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அந்தப் பெண்ணுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தது.

சுமார் 4 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட மோசடியில் அவர் ஈடுபட்டதும், பணக் கொடுக்கல் வாங்கல்கள் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கு      மூலமாக மேற்கொள்ளப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு - யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் - நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே அந்தப் பெண்ணுக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்