வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும், யாழ்ப்பாணத்தில், தற்காலிக இடத்தில் இயங்கி வந்த மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு, கிளிநொச்சியில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு நேற்று திறப்பு விழா இடம்பெற்றது.
பிரமாண அடிப்படையிலான குறித் தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா நிதியில், புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பால் காய்ச்சி, சம்பிரதாயபூர்வமாக கட்டம் திறந்து வைக்கப்பட்டது.
அதனால், எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முதல், கிளிநொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து, மக்கள் சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.