யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
குருநகர் ஜே 68 மற்றும் ஜே 69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார்.