நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் மீள் எழுச்சி அடைந்து அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதே அமெரிக்காவின் விருப்பம்

3 weeks ago



இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டாலும் ஸ்திரமற்ற நிலைமையே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில், ராஜபக்ஷக்கள் குறிப்பாக நாமல் ராஜபக்ஷ போன்றவர்கள் மீள் எழுச்சி அடைந்து அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காகவே என்னை மையப்படுத்திய அமெரிக்க தடை அறிவிப்பின் உள்நோக்கமாக உள்ளது என்று ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும் ராஜபக்ஷக்களின் ஒன்றுவிட்ட  சகோதரருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திர சேன மற்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மீது    சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்    மற்றும் மனித உரிமைகள்      தினத்துடன் இணைந்து, உலகு எங்கிலும் உள்ள ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதில் அதன்            உறுதிப்பாட்டை வலியுறுத்தும்    வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை தடைகளை விதித்துள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் எயார்பஸ் விமானங்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை                உறுதிப்படுத்துவதற்காக இலஞ்சம் பெற்றதாக கபில சந்திரசேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான ஊழல் வேலைத் திட்டத்தை முன்னெடுத்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் அமெரிக்க தடை அறிவிப்பு சம்பந்தமாக உதயங்க வீரதுங்க தெரிவிக்கையில்-

அமெரிக்கா என் மீது விதித்துள்ள தடை அறிவிப்பை பார்க்கின்றபோது ஆச்சரியமாகவுள்ளது.

அத்துடன் அடிப்படையற்ற                காரணங்களையும் அதற்கு    கூறியுள்ளமையானது வியப்பு  அளிப்பதாகவும் உள்ளது.

அந்த வகையில் சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

முதலாவதாக, இந்த தடை அறிவிப்பானது தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமொன்றின் அறிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் குறித்த அறிக்கையில் அறுபது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதும் அவை படை அதிகாரிகளாகவே உள்ளனர்.

அதில் எனது பெயர் உள்ளடக்கப்படவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

அவ்வாறான நிலையில் அமெரிக்கா எனது பெயரை உள்ளீர்த்து தடை விதித்தமைக்கு காரணம் அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும்.

அதாவது அமெரிக்காவின் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட்லூ இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இவர் அநுரகுமாரவுடன் பேச்சுக்களை நடத்தும் போது நாட்டுக்கு வெளியில் மோசடியான முறையில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கான தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம் அவர்களுக்கு இன்னுமொரு தேவையும் உள்ளது. அதாவது அநுர அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் ஸ்திரமற்ற நிலையில் தான் உள்ளார்கள் ஆகவே ராஜபக்ஷ குடும்பம் மீள் எழுச்சி கண்டுவிடும் ஆட்சிக்கு வந்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.

குறிப்பாக நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இளம் தலைமுறையினர் ஆட்சியதிகாரத்தினைப் பெற்று விடுவார்கள் என்ற அச்சம் இருக்கிறது.

இதன் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தை அடியோடு பலவீனப்படுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனை அநுர அரசுக்கு ஒரு உதவியாகவே அமெரிக்கா செய்கின்றது.

இதேபோன்றதொரு நிலைமை முன்பும் காணப்பட்டது.  2015ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் ஜோன் ஹெரி இலங்கைக்கு 43 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகை தந்திருந்தார்-என்றார்.

அண்மைய பதிவுகள்