யுக்திய நடவடிக்கையில் 822 பேர் கைது

6 months ago



நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப் பொருள் தொடர்பான குற்றங்களின் அடிப்படையில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்க ளில் 811 ஆண்களும் 11 பெண்களும் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதான சந்தேக நபர்களில் 32 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 12 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர்.


சந்தேக நபர்களிடம் 304 கிராம் 623 மில்லிகிராம் ஹெரோ யின், 495 கிராம் 52 மில்லிகி ராம் ஐஸ் போதைப்பொருள், 3,884 கிராம் 847 மில்லிகிராம் கஞ்சா, 4,391 கஞ்சா செடிகள் மற்றும் 340 போதை மாத்திரை கள் என்பன கைப்பற்றப்பட்டுள் ளன.


(அ)