கஞ்சிபான இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பெலாரஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

5 months ago


பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் மற்றும் லொகு பெட்டி ஆகியோரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை பெலாரஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பான தகவல்களை அடுத்து வரும் நாட்களில் பெலாரஸ் அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கஞ்சிபான இம்ரான் மற்றும் லோகு பெட்டி ஆகியோருடன் அமில ரோடும்பாவும் கைது செய்யப்பட்டு பெலாரஸில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெலாரஸ் நாட்டுக்குள் நுழைய அவர்கள் சமர்ப்பித்த கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.

அவர்களை நாடு கடத்துவதற்கு பெலாரஸ் அரசாங்கம் அனுமதித்தால் 24 மணித்தியாலங்களுக்குள் அந்த குற்றவாளிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் செய்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மற்றும் பெலாரஸ் நாட்டிற்கு இடையில் சர்வதேச உறவுகள் இல்லாததால், இந்த நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது இன்னும் துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.

லொக்கு பெட்டி ஒரு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி மற்றும் கஞ்சிபான இம்ரானுக்கு முன்னர் வழங்கப்பட்ட சிவப்பு பிடியாணை இரத்து செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதே காரணமாகும்.

எவ்வாறாயினும், கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பெலாரஸில் கஞ்சிபான இம்ரானுக்கு எதிராக சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.