யாழில் சீரற்ற காலநிலையால் இன்று (27.11.2024) பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிப்பு

1 month ago



யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (27.11.2024) பி. ப 03.00 மணி நிலவரப்படி 8,460 குடும்பங்களைச் சேர்ந்த 29,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளனர்.

மேலும் 40 பாதுகாப்பு நிலையங்களில் 831 குடும்பங்களைச் சேர்ந்த 2,883 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


அண்மைய பதிவுகள்