2025 அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

1 week ago



உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் 8.09 பில்லியனாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது .

2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை சரிவு 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.

மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்த வரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும்.

அதேவேளை ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்