யாழ்.காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கையால் பொதுமக்கள் திட்டமிட்டு தாமதப்படுத்தப் படுகின்றனர் என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காங்கேசன்துறை சுங்கத்தில் இரு கருமபீடங்கள் உள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் பயணி ஒருவரிடம் 35 முதல் 40 நிமிடம் வரை விசாரணை நடக்கிறது.
அடிப்படை வசதிகளற்ற அமர்வதற்கு கதிரைகள்கூட இல்லாத நிலையில் பொதுமக்கள் நீண்டநேரம் நின்றபடி இருக்க வேண்டியுள்ளது. என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதேநேரம், சில பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படுகின்ற போதிலும் பாதித் தொகைக்கே பற்றுச் சீட்டு வழங்கப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், பயணிகள் கொண்டு வரும் சிறுதொகை பழங்களையும் அதிகாரிகள் பறித்துக் கொள்கின்றனர் என்றும் தொழில் ரீதியாக இந்தியாவுக்கு செல்பவர்களிடம் சுங்க அதிகாரிகள் இலஞ்சம் கோருகிக்னறனர் எனவும் கூறப்படுகின்றது.