யாழ். ஸ்ரீவல்லிபுராழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் வீசப்பட்டுள்ளன.

2 weeks ago




யாழ். புலோலி - கொடிகாமம் வீதியில் இருந்து துன்னாலை ஸ்ரீவல்லிபுராழ்வார் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் ஆயிரக் கணக்கான காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் வீசப்பட்டுள்ளன.

இப் பகுதியில் பருத்தித்துறை பிரதேச சபையினரின் கழிவுகள் கொட்டப்படும் பகுதி உள்ளது.

இப் பகுதியில் தனியார் பலரும் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் கொட்டி வருகின்றனர்.

இந்தப் பகுதியை அண்மித்தே வீதியோரமாக காலாவதியான ஆயிரக் கணக்கான குளிர்பானப் போத்தல்கள் கொட்டப்பட்டுள்ளன.

இப் பகுதியில் வீதியோரமாக பாதுகாப்பற்ற முறையில் தனியார் பலரும் கழிவுகளைக் கொட்டுவதானால் இவ் வீதியால் பயணிக்க முடியாதவாறு துர்நாற்றம் வீசி வருவதுடன், டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் அபாயகரமான இடமாகவும் காணப்படுகிறது.