இலங்கை கூலிப்படையினரில் பலர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்

6 months ago

உக்ரைனுக்கு எதிராகப் போரிடும் இலங்கையைச் சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஷ்ய பிரஜைகளாக மாறி, அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, உக்ரைன் - ரஷ்யா போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுத் தருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளன.

இவர்களில் பலர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர். ரஷ்ய குடியுரிமையை பெற்றுக்கொண்டுள்ளனர்

இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக் கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

நீங்கள் இலங்கைப் பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களுக்கு உரிமையில்லை.

சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது.

முகாம்களில் உதவியாளர்களாகப் பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து சிலரை போருக்குள் சிக்க வைத்துள்ளனர். ஏனையவர்கள் தெரிந்தே இணைந்து கொண்டுள்ளனர் என அலி சப்ரி மேலும் கூறினார்.


அண்மைய பதிவுகள்