ஒன்றாரியோவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

4 months ago


இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய புதிய தக வல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஹெமில்டன் பொலிஸார் இந்தப் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளார் எனக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பான புதிய படம் ஒன்றைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய இந்த நபரைத் தாங்கள் தேடி வருகின் றனர் எனப் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.

இட்டாபிகாக் பகுதியில் வீடு ஒன்றில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். 82 மற்றும் 60 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

நகரில் இந்த ஆண்டில் இதுவரை 54 படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் 911 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அல்லது வேறும் வழிகளில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.