தமிழரசுக் கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிலரிடம் ஒழுக்கம் இல்லை.-- பெண் வேட்பாளர் சி.மிதிலைச்செல்வி தெரிவிப்பு

2 months ago



தமிழ் அரசுக் கட்சியில்                   பாராளுமன்றத் தேர்தலில்      வேட்பாளர்களாக போட்டியிடும்    சிலரின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயம் இல்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி சிறீபத்மநாதன் தெரிவித்தார்.

தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில், தமிழ் அரசு கட்சியில் பல வருடங்களாக அங்கத்தவர்களாகவும் பொறுப்பு மிக்க பதவியில் இருந்து வெளியேறியவர்களை கிண்டல் அடிக்கும் வகையில் இரு மாங்கனிகள் எனத் தெரி வித்திருந்தார்.

நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன் தமிழ் அரசு கட்சியிலிருந்து ஆளுமையான பெண்களை நீக்கிவிட்டு காடுமேடென அலைந்து திரிந்து இரண்டு வெம்பல் மாம்பழங்களை அழைத்து வந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்.

பிரசாரத்துக்கு சென்ற என்னிடம், தமிழ் அரசின் வேட்பாளர்கள் சிலரின் பெயர்களை கூறி, சுய ஒழுக்கமற்றவர்களுக்கு எவ்வாறு ஆசனங்கள் வழங்கப்பட்டது என்று கேட்டார்கள்.

நான் அவர்களிடம் கூறினேன் தமிழ் அரசு கட்சியின் நிலைமை அவ்வாறு தான் இருக்கிறது திறமையானவர்கள் - நேர்மையானவர்கள் கட்சியில் இருந்து விலகி விட்டார்கள் - என்றேன்.

அண்மைய பதிவுகள்