34 வருடங்களின் பின்னர், யாழ்.பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி
4 months ago

34 வருடங்களின் பின்னர், யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், மக்கள் தினந்தோறும் வழிபாடுகளை மேற்கொள்ள நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலப் பகுதியில், உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள, பலாலி 11 வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, மக்கள் தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆலயம் செல்வதற்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாதை ஊடாக, மக்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
