பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன பதவி விலகியதையடுத்து பலர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3 months ago


புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று விலகியதை அடுத்து பலர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் பதவியிலிருந்து விலகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களும் தமது பணியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.