இராணுவ முகாமின் மின்கட்டணம் 450,000 ரூபா செலுத்தப்படவில்லை

7 months ago

மானிப்பாய் கிறீன் மருத்துவமனையின் ஒருபகுதியில் இயங்கிவந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவை 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என்றும், அந்தத் தொகையை செலுத்தாமல் இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் ஆயரான டானியல் தியாகராஜாவின் காலத்தில் இருந்து, மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் தமது முகாமை அமைத்திருந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் அந்த முகாம் இராணுவத்தால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்தே இராணுவத்தினர் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின்சார நிலுவையை வைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் தொடர்பு கொண்டுகேட்டபோது; "சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தமது முகாமை இயக்கி வந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் என்று கூறினார்.