காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்.வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மென்பான நிறுவனமொன்றுக்கு அவர் 2 லட்சம் ரூபா காசோலையை எழுதிக் கொடுத்துள்ளார்.
எனினும், அதற்கும் குறைவான தொகையே அவருடைய வங்கிக் கணக்கில் இருந்துள்ளது.
இதையடுத்து வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய உறவினர்களால் அந்தத் தொகை வங்கிக்குச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(அ-ம-125)