இலங்கை இலத்திரனியல் பயண அங்கீகார முறைமையில் ஏற்பட்டுள்ள தாமதம் சுற்றுலாத்துறை குளிர்காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்வுகூரல்.
இலத்திரனியல் பயண அங்கீகார முறைமையை மீண்டும் செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை குளிர்காலத்தில் வீழ்ச்சியை சந்திக்கலாம் என சுற்றுலாத்துறையை சேர்ந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய விஸா நடைமுறை சர்வதேச பயணிகளிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற் படுத்தியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளபடி அரசாங்கம் இலத்திர னியல் பயண அங்கீகார முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் வீதிக்கு இறங்கப் போவதாக சுற்றுலா தொழில்துறையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
குடிவரவுத்துறையினர் தாங்கள் நடைமுறைப்படுத்தும் சர்ச்சைக்குரிய விஎஸ்எவ் குளோபல் முறையை இடை நிறுத்திவிட்டு முன்னையை முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இதனை நடை முறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள சுற்றுலாத் துறையைச் சேர்ந்தவர்கள். சுற்று லாப் பயணிகள் கொழும்பு விமான நிலையத்தில் விஸாவை பெறு வதற்கு இரண்டு மணித்தி யாலங்களுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது என குறிப்பிட்டனர்.
இலங்கையை சென்றடைந்ததும் சுற்றுலாப் பயணிகளுக்கு விஸா வழங்கப்படுமா என்பது குறித்த சந்தேகம் காரணமாக இலங்கைக்கு செல்லும் பயணிகளை ஏற்றுவதற்கு சர்வதேச விமானச் சேவைகள் தயக்கம் காட்டுகின்றன எனவும் சுற்றுலாத் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. சுற்றுலா தொழில்துறை ஏற்கனவே பல வீனமான நிலையில் உள்ளது. இந்த தாமதங்கள் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போக்குவரத்து எச்சரிக்கையை விடுக்கலாம். பிரான்ஸூம் அவுஸ்திரேலியாவும் ஏற்கனவே அவ்வாறான எச்சரிக்கையை விடுத்துள்ளன என இலங்கை ஹோட்டல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹிரான் குரே தெரிவித்துள்ளார்.