இந்தியா திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் கலாம் விருது அறிவிப்பு
5 months ago

இந்தியாவின் பாண்டிச்சேரியை (புதுச்சேரி) மையமாகக் கொண்ட திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நினைவாக கலாம் விருதுகளை வழங்கி வருகிறது.
இதில், இலங்கையின் இலக்கியத் துறையை சார்ந்தோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி புதுவை தமிழ்ச் சங்கத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, கவிதாயினி சிவரூபன் சர்வேஸ்வரி, கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம், நெடுந்தீவு செ. மகேஷ் ஆகியோர் கலாம் சாதனை ரத்னா விருதுகள் பெறவுள்ளனர்.
கவிஞர் வி. அபிவர்ணா, அரியநாயகம் சிறீதர், கவிஞர் குமாரவேலு டனீஸ்வரன், கலாநிதி சூரியகுமாரி இராசேந்திரம் ஆகியோர் கலாம் சாதனையாளர் விருதுகள் பெறவுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
