கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறங்கியுள்ளார்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் செய்த நேரம் பார்த்து கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியை மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி ட்ரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.
கனடா அமெரிக்காவின் தயவில் தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.
இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், பதவி விலகல் செய்தார்.
கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.
ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை ட்ரம்ப் முன்வைத்து வருகிறார்.
கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வென்ற ட்ரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
