தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவிப்பு.

3 months ago


தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் உடன் மீளப்பெறப்படும் என்று ஐக்கிய சோஷலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறை வேலைத்திட்டத்தில் முன்வைக்கப் படவேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளும் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடன் விடுதலை செய்யப்பட வேண் டும். காணாமல் போனவர்கள்தொடர் பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

சிவில் நிர்வாகத்தில் இராணுவச் செயற்பாட்டை நிறுத்தல், பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இராணுவம் மீளப்பெறப் படவேண்டும்.

வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வுக்கு புத்துயிர் வழங்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அண்மைய பதிவுகள்