வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாளை செவ் வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள்சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் தெரிவிக்கையில், இந்தப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரம் அன்றி, எதிர்கால தலைமுறையினரும் எம்மைப் போல் அவலநிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்வி சீர்திருத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது.
பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்னை என்பது பட்டதாரிகளை மாத்திரமல்ல அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் சமூகத்தையும் வாழ்வாதார மற்றும் பொருளாதார ரீதியாக வெகுவாக பாதித்துள்ளது. அத்துடன், எதிர்கால தலைமுறையி னரையும் முழு சமுதாயத்தையும் மிக மோசமாக பாதிக்கும் என் பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எனவே, தற்போதைய தேர்தல் காலத்தில் எமக்கான பிரச் னைகளை வெளிக்கொணர்வ தன்மூலம் ஏதேனும் ஒரு வகை யிலான சாதகமான வாய்ப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியும். போராட்டங்கள் மூலம் மட்டுமே எங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை நிதர்சனமான உண்மை. இந்தப் போராட்டத்தில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் பங்கேற்க வேண்டும் என்றார்.