பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்க ஈராக் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
5 months ago
பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை ஈராக் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்துக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இளம் பெண்களின் கல்வி, உடல்நலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போது வரை ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஈராக் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய சட்டம், குடும்ப விஷயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா என்பதை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்கும்.