காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.நா. ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள்னர்.
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.நா. ஊழி யர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்துள் னர். இதற்கு ஐ.நா. கடும் கண்டனத் தைத் தெரிவித்துள்ளது.
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஆயிரத்து 139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது.
இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணயக் கைதிகள் 100க்கும் மேற் பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிராட்டில் உள்ள பள்ளிக்கூடமான தங்குமிடத் தின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்திற்கு ஐ.நா. தலை வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
சுமார் 12 ஆயிரம் பேர் தங்குமிடமாக மாறிய பள்ளிக் கூடத்தின் மீது மீண்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் நமது ஊழியர்கள் 6 பேர் அடங்குவர்.
சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.