




இந்து பக்தர்களால் மேற்கொள்ளப்படும் வருடாந்த கதிர்காமம் யாத்திரை குமண தேசிய வனப் பூங்காவின் உகந்தை கோயிலுக்கு அருகில் ஆரம்பமானது.
இந்த பாதயாத்திரை குமண தேசிய வனப் பூங்கா ஊடாக சுமார் 79 கிலோ மீற்றர் பயணித்து கதிர்காமம் ஆலயத்தை சென்றடைகிறது.
வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பெருமளவிலான இந்து பக்தர்கள் பங்குபற்றுவதுடன், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு இராணுவத்தினரால் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
அங்கு பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இராணுவத் தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் பாதயாத்திரையில் கலந்துக்கொள்பவர்களின் நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்க இராணுவத்தினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
