
கனடா டொரன்டோவில் வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பஸ் சேவை இடைநிறுத்தம் தொடர்பில் டொரன்டோ போக்குவரத்து சேவை சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை சில பகுதிகளுக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பினை முதன்மையாக கருத்தில் கொண்டு இவ்வாறு சேவையை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை சீர்கேடு காரணமாகவே இவ்வாறு சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்திலும் பனிப்பொழிவுக்கு தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
