யாழில் பொலிஸார் எனக் கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு
3 months ago

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் எனக் கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்துக்கு அருகில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நின்ற இருவர் வீதியில் வந்த நபரை வழிமறித்து, தம்மை பொலிஸார் எனக் கூறி அவரது உடைமைகளைச் சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது அவரது உடமையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமெராக்களின் உதவியுடன் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
