கனடாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் குடிவரவு கொள்கையில் மாற்றம் தேவை என அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு முறைமை மாற்றி அமைக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் புதிதாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர் எனவும் இதனால் பல தசாப்தங்களாக காணப்பட்ட குடியேறிகளுக்கான நலன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நடைமுறைகளில் மாற்றம் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் குடியேறிகள் சனத்தொகை மூன்று வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாகவும் இது கடந்த தசாப்தத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வலுவான ஊழியப்படையொன்றை உருவாக்க குடியேறிகளின் வருகை அவசியமானது என அமைச்சர் மில்லர் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.