வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

5 months ago


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று செவ்வாய்க்கிழமை (23) முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கலைத்தூது மண்டபத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் ஆனாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் நாட்களில் சுழற்சி முறையில் முன்னெடுக்கவுள்ளதாக உறவுகள் தெரிவித்தனர்.

யாழ்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் நிர்வாகத் தெரிவு இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.