இலங்கையில் பாரிய ஊழல் காரணமாக மருந்துகள் கொள்வனவு நிராகரிப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்
இலங்கையில் பாரிய ஊழல் காரணமாக மருந்துகள் கொள்வனவு நிராகரிப்பு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படும்
இலங்கையில் அடுத்த வருடம் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான தொழிற்சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளி யிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
2025 ஆம் ஆண்டுக்கான மருந்துகள் கொள்வனவுக்குரிய அமைச்சரவை பத்திரங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அடுத்த வருடம் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு வைத்தியத்துறையில் ஏற்கனவே காணப்பட்ட ஊழல்கள் காரணமாக இருக்கலாம்.
எனினும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இந்த விடயத்தை நாம் முன் கூட்டியே கூறிவைக்க விரும்புகிறோம்.
மேலும், கடந்த காலங்களில் தரமற்ற மருந்து பாவனையால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
அவர்கள் தொடர்பான விபரங்களை சேகரித்து உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்-என்றார்.