பூநகரி கௌதாரிமுனை கடலில் மிதந்து வந்த சடலம்

5 months ago



பூநகரி - கௌதாரிமுனை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு சடலமாக அடையாளம் மீட்கப்பட்டார்.

மேற்படி நபரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் தலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்