இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி தொடர்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கட் வாரியத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரி20 போட்டித் தொடருக்கான இந்திய குழாமிற்கு சூர்யகுமார் யாதவ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரி 20 குழாமில் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யாஸாவி ஜய்ஸ்வால், ரிங்கு சிங், ரயான் பாராக், ரிசப் பான்ட், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்ட்யா, சிவம்டுபே, அக்ஸர் பாடெல், வொஷிங்டன் சுந்தர், ரவி பிஸோனோய், ஆர்ஸ்டீப் சிங், கலீல் அஹமட் மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை, சர்வதேச ஒருநாள் குழாமிற்கு ரோஹித் சர்மா தலைமை தாங்க உள்ளார். ஒருநாள் குழாமில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கொஹ்லி, கே.எல். ராகுல், ரிசப் பான்ட், ஸ்ரேயஸ் ஐயர், சிவம் டுபே, குல்திப் யாதவ், , வொஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டெல், ஆர்ஸ்டீப் சிங், கலீல் அஹமட், ரயன் பாராக், ஹார்ஸிட் ரானா மற்றும் மொஹமட் சிராஜ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.