இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 13 வகை மருந்துகள் தரமின்மையால் விலக்கி வைப்பு.--மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிப்பு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 13 வகை மருந்துகள் தரமின்மை காரணமாக பயன்பாட்டில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.
கடந்த வாரம் 8 மருந்துகளும், இந்த வாரம் 5 மருந்துகளும் பாவனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட 8 மருந்துகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 300 வகையான மருந்துகள் பாவனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றில் பல நிமோனியா மூளைக்காய்ச்சல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுபவை.
ஒவ்வொரு வாரமும் தரமற்ற மருந்துகள் அகற்றப்படுகின்ற போதும், இந்த மருந்து இறக்குமதியில் பணியாற்றிய அதிகாரிகள் தொடர்பாக சுகாதார அமைச்சால் முறையான வேலைத்திட்டத்தை உருவாக்க முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.