இலங்கையில் அரசியல்வாதிகள், இராணுவம், அரச அதிகாரிகள் என 7 பேரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை.-- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுப்பு

அரசியல்வாதிகள், இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் என 7 பேருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதனால், இந்த 7 நபர்களும் தமது சொத்துகள், வங்கி கணக்குகள் மற்றும் காப்புறுதியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 7 பேரும் தமது வருமானம் மூலம் சேர்க்க முடியாதளவு சொத்துகளை எவ்வாறு சேர்த்தனர் என்பது குறித்த புலனாய்வு சாத்துதல்களையும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு செய்துள்ளது.
அத்துடன், இந்த சொத்துகள் தங்கள் குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலம் கிடைத்தன என்று இவர்கள் தெரிவித்திருப்பது பொய் என்பதும் விசாரணைகளில் வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
