முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை புகைப்படம் எடுத்து மிரட்டிய புலனாய்வாளரை துரத்தினர்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (10) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களின் அருகே சென்று ஒவ்வொருவராக புகைப்படம் எடுத்தபோது, இவ்விடத்தில் ஒவ்வொரு உறவுகளையும் புகைப்படம் எடுக்க வேண்டிய தேவை என்ன என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறி, அந்த இராணுவ புலனாய்வாளரை துரத்தியுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடி வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.