ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று ஆயுள்தண்டனை விதிப்பு
5 months ago

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி பமில ரத்நாயக்கவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை அண்மித்த கடற்பரப்பில் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரில் 10 பேர் குற்றத்தை ஒப்புக். கொண்டுள்ளமையால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 7 பேர் மீதும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காலியை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகை சோதனைக்குட்படுத்திய போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்பட்ட 146 கிலோகிராம் பொருள்கள் அடங்கிய பொதியுடன் சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பொதியில் 48 கிலோ கிராம் ஹெரோயின் காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
