மலேசியாவுக்குள் நுழைய முயன்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த 200 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
3 months ago

மலேசியாவுக்குள் நுழைய முயன்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த 200 அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவுக்குள் அண்டை நாடுகளான மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக நுழைகின்றனர்.
சமீப காலமாக அகதிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த எல்லைப் பகுதியில் மலேசிய அரசாங்கம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள கெடா மாகாண கடற்பகுதியில் அகதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் கடலோர பொலிஸார் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அகதிகளை ஏற்றிக் கொண்டு 2 படகுகள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து படகில் இருந்த 200 அகதிகளையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
