யாழ்.காங்கேசன்துறை அஞ்சல் பணிமனை சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
2 months ago
யாழ்.காங்கேசன்துறை அஞ்சல் பணிமனை சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் சேவையை ஆரம்பித்துள்ளது.
போர் காரணமாக 1990ஆம் ஆண்டு காங்கேசன்துறையிலிருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இதன்போது, காங்கேசன்துறை அஞ்சல் பணிமனையும் இடம் பெயர்ந்தது.
காங்கேசன்துறை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டமையை தொடர்ந்து அஞ்சல் அலுவலகம் தற்காலிகமாக மாவிட்டபுரத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இந்த நிலையிலேயே, காங்கேசன்துறை அஞ்சல் பணிமனையின் சேவை மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
அதன் சொந்தக் காணியில் இருந்த கட்டடம் அழிவடைந்துள்ள நிலையில் தற்போது வாடகைக்கு பெறப்பட்ட கட்டடத்திலிருந்து அஞ்சல் பணிமனையின் சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.