இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டத்தை பரிசீலிக்க குழு நியமிக்கும் யோசனை அமைச்சரவையில் நாளை சமர்ப்பிப்பு
3 months ago

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
