சண்டே லீடர்” வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியை கடத்தியவர்களே விடுவிப்பு.-- சட்டமா அதிபர் தெரிவிப்பு

2 months ago



சண்டே லீடர்” வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியை கடத்தியவர்களே விடுவிக்கப்பட்டனர் என்று சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பரிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை கொழும்பு ஊட கம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்-

"சண்டே லீடர்” வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிர மதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபரையும் விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தவில்லை.

லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அந்த வழக்கு தொடர்பான வழக்கில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நபர் 2009ஆம் ஆண்டு கடத்தப்பட்டதாக 2015ஆம் ஆண்டு பொலிஸில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, 3 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

ஆனால், அவர்கள் மீது வழக்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை.

அதன்படி, தொடர்புபட்ட சந்தேக நபர்களை விடுவிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல-என்றார் அவர்.

அண்மைய பதிவுகள்