சுவிஸ் நாட்டில் மாவீரர் நினைவுக்கல் அமைந்த லவுசான் மாநிலத்தின், வர்டோன் நகரில் நடுகல் வழிபாடு இடம்பெற்றது.
தமிழீழ மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று சுவிஸ் நாட்டில் மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தின், வர்டோன் நகரில் நடுகல் வழிபாடு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
சுவிஸ் நாட்டில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற நடுகல் வழிபாடு தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, இறுதி வரை களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை நினைவேந்தும் வகையில் சுவிஸ் நாட்டின் லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் அமைக்கப் பெற்றுள்ள மாவீரர் நினைவுக் கல்லுக்கான நடுகல் வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்வில் உறவுகளும் உணர்வாளர்களும் மாவீரர் குடும்பங்களும் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டுக்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எதிர்வரும் 27 அன்று 12.30 மணிக்கு பாசல் மாநிலத்தின் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
மாவீரருக்கு வணக்கம் செலுத்தி, உறுதி எடுக்க தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் அணி திரண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளது.