ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளை நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி கட்டுப்பாட்டு நடவடிக்கையானது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவு சீட்டு கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் தெரிவித்திருந்தார்.