2024 ஜனாதிபதித் தேர்தலில் 35 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு.
6 months ago

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 13,619,916 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது மொத்த எண்ணிக்கையில் 79.46 சதவீதம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், 20.54 சதவீதமானோர் இம்முறை வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதாவது 3,520,438 பேர் வாக்களிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 17,140,354 என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
