யாழ்.கச்சேரி - நல்லூர் வீதியில் ஒரு வீட்டில் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தமையால் அப்பகுதியில் பரபரப்பு
4 months ago


யாழ்.கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள மூத்த விநாயகர் கோவிலுக்கு அண்மையில் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்தமையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (23.11.2024) இடம்பெற்றுள்ளது.
முதலை உயிருடன் இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்த உத்தியோகத்தர்களால் முதலை உயிருடன் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், யாழ் மாவட்டத்தில் நிலவி வரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து குறித்த முதலை ஊருக்குள் வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
