யாழ்.நல்லூர்ப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 64 சட்டவிரோதக் கட்டடங்கள் தொடர்பாக நல்லூர்ப் பிரதேச சபையால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 64 சட்டவிரோதக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 57 சட்டவிரோதக் கட்டடங்கள் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்ட அறவீடுகளுடன் அனுமதிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை 7 சட்டவிரோதக் கட்டடங்கள் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன.
இதுவரை குறித்த கட்டடங்களை இடிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வழக்குப் பரிசீலனையில் உள்ளதாகவும் நல்லூர்ப் பிரதேசசபை தெரிவித்துள்ளது.