இந்தியா இராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமானம் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகின


இந்தியா இராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் அதன் அருகிலேயே புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது.
545 கோடி ரூபாவில் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளோடே புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக புதிய பாலத்தின் மீது ரயில் என்ஜின்களை விட்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில் நேற்று கடலோர காவல் படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கே விட்டு அதன் திறந்து மூடும் அமைப்பை சோதனை செய்யவுள்ளனர்.
புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதத்தில் தைப்பூச நாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினமோ பாலம் திறக்கப்படலாம்.
புதிய பாலத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
