கனடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய இளம் மாணவர் விசாவில் கனடாவுக்குள் வந்தவர் என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவிப்பு.

3 months ago


கனடிய பொலிஸாரால் கியூபெக் மாகாண எல்லைக்கு அருகில் வைத்து கடந்த வாரம் கைது செய் யப்பட்ட பாகிஸ்தானிய இளம்  மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந் துள்ளார் என அமைச்சர்          மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் புரூக்லின் பெருநகரத்தில. உள்ள யூத மையம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இந்த நபர் தற்போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

கியூபெக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஷாசீப்கான் மீது கடந்த வாரம் வழக்கு பதியப்பட்டது.

இந்த நபருக்கு 2023 மே மாதம் மாணவர் விசா வழங்கப்பட்டதாகவும்,

ஜூன் மாதம் 24 ஆம் திகதி அவர் பியர்சன் சர்வதேச விமான நிலையம் வழியாக கனடாவிற்குள் நுழைந்ததார் எனவும் கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

ஷாசீப்கான் தொடர்பில்         வெளியிடும் கருத்து இது மட்டுமே என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அந்த நபர் குறித்து மேலதிக தகவலை வெளியிடுவது ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷாசீப்கான் கடந்த புதன்கிழமை கியூபெக்கில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையவும், எதிர்வரும் அக்டோபர் 7 ஆம் திகதி யூத மக்கள் மீது தாக் குதல் முன்னெடுப்பதும் அவரது திட்டமாக இருந்துள்ளது.

ஆனால், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே ஷாசீப்கான் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் இரகசியமாக விசாரணை முன்னெடுத்து வந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத குற்றச்சாட்டு விசார ணையை எதிர்கொள்ள அவரை  நியூயோர்க் நகரில் ஒப்படைக்கவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

வெறும் 20 வயதேயான ஐ.எஸ் ஆதரவாளர் ஷாசீப் கான் கைது தொடர்பில் கனடாவில் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதனிடையே பாதுகாப்பு மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அர சாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண் டதாக அமைச்சர் மில்லர் தெரிவித் துள்ளார்.