படகு உடைந்து கடலில் வீழ்ந்த இரு இந்திய மீனவர்கள் கடற்படையால் மீட்பு.

4 months ago


மீன்பிடிப் படகு உடைந்து கடலில் மூழ்கியதனால் கடலில் வீழ்ந்த இரண்டு இந்திய மீனவர்கள் நீந்தி கச்சதீவுக் கரையை அடைந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அதேவேளை, இரண்டு இந்திய மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்காக ரோலர் விசைப் படகில் நான்கு மீனவர்கள் பயணித்த போது இந்திய எல்லைக்குள் கச்சதீவுக்கு அண்மையாக படகு உடைந்து கடலில் மூழ்கியுள்ளது.

மூழ்கிய இந்தியப் படகில் இருந்த இரண்டு மீனவர்களே கச்சதீவை அடைந்த போது இருவரும் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதேநேரம் படகில் இருந்து காணாமல் போன இரண்டு இந்திய்மீனவர்களையும் இலங்கை, இந்தியக் கடற்படையினர் தேடி வருகின்றனர்.